உள்ளாட்சி தேர்தல் புறக்கணிக்க முடிவு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் பாலக்கோடு பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன இதில் 7, 11, 12 ஆகிய வார்டுகள் இதுவரை முஸ்லிம் மக்கள் பெரும்பாலும் வசிக்கும் வார்டுகளாகும் இந்த வார்டுகளில் இதுவரை முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர்களே வார்டு பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர் தற்போது புதியதாக வார்டு மறு வரையறை செய்ததில் 11 வது வார்டில் முஸ்லீம் அல்லாத மாற்று சமுதாயத்தினரை 50 சதவீதம் சேர்த்துள்ளனர் இதனால் சிறுபான்மையின மக்களை இது பாதிக்கும் எனவும் மேலும் பாலக்கோடு பேரூராட்சியில் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் குறையும் எனவே பழைய முறையிலேயே வார்டு மறு வரையறை செய்ய வேண்டும் என 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பாலக்கோடு பேருராட்சியில் மனு அளித்தனர் பின்னர் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் மேலும் முஸ்லிம் சமுதாயத்திற்க்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை  என்றால் குடும்ப அட்டை, ஆதார் அட்டை வாக்காளர் அட்டை ஆகியவற்றை அரசிடமே ஒப்படைத்து விட்டு தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..