பைபாஸ் சாலையில் தொடரும் விபத்து.

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் தெற்கு வட்டார போக்குவரத்து அருகே சாலைகள் மிகவும் மோசமாக உள்ள காரணத்தினாலும் ஷேர் ஆட்டோக்கள் திடீர் திடீரென வருவதாலும் பின்னால் வரும் வாகனங்கள் முன்னால் செல்லும் வாகனம் மீது மோதுகின்றன. சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் முன்னால் சென்ற ஷேர் ஆட்டோ திடீரென்று பிரேக் அடிக்வேக பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அந்த சைக்கிளில் சென்ற முதியவர் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். 108 வாகனத்துக்கு தகவல் கொடுத்து 108 வாகனம் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். மாவட்ட நிர்வாகமும் தேசிய நெடுஞ்சாலை துறையும் பாலத்தை சீர் செய்து காவல்துறை ஷேர் ஆட்டோக்கள் நினைத்த இடத்தில் நிப்பாட்டு வதை தவிர்க்க விபத்து ஏற்படும் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டும் எனவும் அப்படி விதி மீறி செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image