உசிலம்பட்டி டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் தினவிழா வெகுவிமர்சையாக கொண்டாப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெண் குழந்தைகளின் கல்வியில் முக்கிய பங்காற்றி வரும் உசிலம்பட்டி டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா நடைபெற்றது.இந்த விழாவில் பள்ளி குழந்தைகளின் ஆடல் பாடல், கிராமிய நடனம், நாடகம், கிறிஸ்மஸ் தாத்தா மாறுவேட போட்டி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.

மேலும் இந்த விழாவில் போதகர் டேனியல் விழாவின் ஆரம்ப ஜெபம் செய்து துவக்கி வைத்தார், பள்ளியின் தலைமையாசிரியை மார்கிரெட் கிரேசீலியா வரவேற்புரை நிகழ்த்தி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தாளாளர் செல்லத்துரை , கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவனர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தி வழங்கினர். பள்ளியின் உதவி தலைமையாசிரியை பென்னட் அனைவருக்கும் நன்றியுரை நிகழ்த்திய இந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..