பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பில் அக்கறை காட்டும் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமம்… பெற்றோர்களுக்கான பிரத்யேக செயலி…

இன்று வளர்ந்து வரும் நவீன உலகில் தினம் தினம் நாம் காதில் கேட்கும், பார்க்கும் சமுதாய நிகழ்வுகள் வருங்கால தலைமுறையினர் எதிர்காலத்தை பற்றிய ஒரு அதிர்வை மனதில் ஏற்படுத்துகிறது.  இளைய தலைமுறையின் எதிர்காலத்தை செம்மைபடுத்துவதில் பெற்றோர்களுக்கு அடுத்து முக்கிய பங்கு வகிப்பது கல்வி நிறுவனங்களாகும்.

இந்நிலையில் மாணவர்களின் கல்வி மற்றும் அனைத்து செயல்பாடுகளையும் பள்ளியின் வரத்து முதல் கல்வியில் உள்ள ஈடுபாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி பெற்றோர்களுக்கான பிரத்யேக செயலி Android மற்றும் Apple இரண்டிலும் SKOOKBEEP என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.

இந்த செயலியில் பெற்றோர்கள் தங்களின பத்து எண்கள் கொண்ட மொபைல் எண்கள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பதிவு செய்வதில் சிரமங்கள் ஏதும் இருந்தால் பள்ளி அலுவலகத்தை தொடர்பு கொள்ள பள்ளி தாளாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image