இராமேஸ்வரத்தில்10 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை தனிப்பிரிவு காவலருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை

ராமேஸ்வரம் தனிப்பிரிவு தலைமை காவலர் சரவணன், 44. இவர், ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வரும் காவல் துறை ச உயரதிகாரிகள், அவர்களது உறவினர்களை ராமநாதசுவாமி கோயிலுக்கு அழைத்துசென்று சுவாமி தரிசனம் செய்ய வைப்பதே இவரது பிரதான பணி. தனிப்பிரிவில் 4 ஆண்டுகளா பணியாற்றிய சரவணன், அங்குள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தார்.இந்நிலையில், 2018 ஜன., 23ல் காவலர் குடியிருப்பில் வசிக்கும் மற்றொரு காவலரின் 10 – வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து சரவணன் வெளியூருக்கு மாறுதல் செய்யப்பட்டார்.இந்நிலையில், சரவணனின் பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமியின் தாய், சரவணன் மீது ராமேஸ்வரம் 2018 பிப்.4ல் புகார் அளித்தார். இதன்படி வழக்கு பதிவுசெய்து போலீசார் கைதுசெய்ய முயன்றதை அறிந்த சரவணன் தலைமறைவானார். சில மாதங்களுக்கு பின் சரவணனை ராமேஸ்வரம் போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் சிறப்பு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட காவலர் சரவணனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ. 9 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..