சுரண்டையில் குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பசுமாடு-உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

தென்காசி மாவட்டம் சுரண்டை பெரியார் நகரில் மாரிசெல்வம் என்பவர் வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் பசுமாடு தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பசு மாடு தவறி விழுந்த விபரம் குறித்து சுரண்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தரப்பட்டது. அதை தொடர்ந்து சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் நிலைய அலுவலர் போக்கு வரத்து திரு அ பாலசந்தர், ஏட்டு ரவீந்திரன், தீயணைப்பு வீரர்கள் ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து சென்று பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.பசுமாட்டை உயிருடன் மீட்டு துரித நடவடிக்கை மேற்கொண்ட சுரண்டை தீயணைப்புத்துறை வீரர்களின் சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image