கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்-நகராட்சி ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு

தென்காசி மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் படி கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு குறித்து ஆய்வு செய்யும் பணி இன்று (டிச.6) நடைபெற்றது.இந்த டெங்கு ஒழிப்பு பணியில் நகராட்சி ஆணையாளர், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் டெங்கு ஒழிப்பு குறித்து நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டது. தற்போது மழைகாலமாக இருப்பதால் குடிநீரை கொதிக்க வைத்து வடிகட்டி பருகுமாறும் பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டது. மேலும் முத்துக்கிருஷ்ணாபுரம் சிந்தமதார் பள்ளி வாசல் தெரு, ஜவகர் தெரு ஆகிய இடங்களில் டெங்கு ஒழிப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், காய்ச்சல் வந்தால் காலம் தாழ்த்தாமல் உடனே மருத்துவர்களிடம் காணப்பிக்கப்பட வேண்டும். பப்பாளி இலை சாறு கொடுக்கப்பட வேண்டும். காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்கள் விபரம் நகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்குமாறும் பொது மக்களிடம் தெரிவிக்கபட்டது.காய்ச்சல் கணடறியப்பட்ட பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கம் பணியும் நடைபெற்று வருகிறது. புகை மருந்து அடிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.டெங்கு தடுப்பு பணியாளர் முலம் அனைத்து பகுதிகளிலும் தடுப்பு மருந்துகள் அடிக்கப்பட்டதுடன், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகிறது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..