கலிக்கம்பட்டி ஊராட்சியில் போடப்படும் மெட்டல் சாலையில் குறைந்த அளவு செம்மண் பயன்படுத்தி பெயரளவில் சாலைபனி நடைபெறுவதால் பொதுமக்கள் அதிருப்தி

திண்டுக்கல் மாவட்டம் கலிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள கலைமகள் காலனி வடக்கு பகுதியில் சுமார் ஏழு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பனி ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வரும் நிலையில். ஒப்பந்ததாரர் சாலையை தரமற்ற முறையில் பெயரளவில் செம்மண் போட்டு அதன் மீது ஜல்லி கற்களை பரப்பி பனியை முடிக்கும் நோக்கில் சாலையை போடுவதாக கூறப்படுகிறது. இது தற்போது பெய்து வரும் மழைக்கே! தாக்குபிடிக்குமா என்ற நிலை உள்ளதால் அப்பகுதிவாழ் கலைமகள் காலனி பொதுமக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுபடுத்தியுள்ளது. மேலும், அரசு விதியின்படி ஒப்பந்ததாரர் அந்த சாலை பனிக்காக ஒதுக்கப்பட்டுள்ள மதிப்பீடு அளவு மற்றும் தூரம் போன்ற விபரங்கள் அடங்கிய போர்டும் பனிக்கான இடத்தில் வைக்கப்படவில்லை.ஆகவே,சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பனிக்கு ஏற்றார்போல் சரியான அளவில் செம்மன் பயன்படுத்தி தரமான மெட்டல் சாலையை அமைத்து தந்து உதவுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..