உசிலம்பட்டியில் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு ஊழியர்கள் சங்கம் அலுவலகத்தில் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது . இதில் உசிலம்பட்டியில் உள்ள கண்மாய் கரை பகுதியை நடைப் பயிற்சி மேற்கொள்ள வசதி செய்துதர கோரியும், 58 கிராம பாசன கால்வாய் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வழங்க வலியுறுத்தியும், அசுவமாநதி ஓடையை சீரமைக்க வலியுறுத்தல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் வெற்றிவேல், மாவட்ட ஆலோசகர் ஆதிசேடன், உசிலம்பட்டி நகர தலைவர் முருகன், உசிலம்பட்டி நகர செயலாளர் ரமேஷ், நகரத் துணைத் தலைவர் மதிவண்ணன், நகர பொருளாளர் காட்டுராஜா, நகர அமைப்பாளர் சுருளிவேல், ஒன்றியச் செயலாளர் சின்னக்கொடி, கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் பழனிவேல், உறுப்பினர் ராமர், கண்ணன். மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply