நெல்லையில் கனமழை எதிரொலி-மண் சுவர் இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கி முதியவர் உயிரிழந்த பரிதாபம்

நெல்லை மாவட்டம் முழுவதிலும் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆறு உட்பட பல இடங்களில் நீர் கரை புரண்டு ஓடுகிறது.இந்நிலையில் மழையால் மண் குடிசையின் சுவர் இடிந்து முதியவர் உயிரிழந்துள்ள பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.நாங்குநேரி அருகே உள்ள குசவன் குளத்தை சேர்ந்த முதியவர் கந்தசாமி (81). இவர் நேற்று இரவு தனக்கு சொந்தமான மண் குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது பெய்த மழையினால் வீட்டின் மண் சுவர்கள் இடிந்து விழுந்தன. இன்று காலை அக்கம்பக்கத்தினர் வீடு இடிந்து இருப்பதை கண்டு இடிபாடுகளை அகற்றினர். அப்போது இடிபாடுகளுக்குள் கந்தசாமி சிக்கியிருப்பதை கண்டு மீட்டனர். இருப்பினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதனை அடுத்து தகவலறிந்து வந்த நாங்குநேரி போலீசார் அவரது உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image