அமீரகம் வருகை புரிந்த நவாஸ்கனி….

அமீரகம் வருகை புரிந்த இராமநாதபுரம் பாரளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனிக்கு துபாய் ஈமான் அமைப்பு சார்பாக லேண்ட் மார்க் ஹோட்டலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்சியில் கீழக்கரை மற்றும் இராமநாதபுர மாவட்டத்தை சார்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு முன் வைத்த கோரிக்கைகளின் விவரம் பின் வருமாறு:
1. கீழக்கரையில் இரயில் நிலையம் அமைப்பது.
2. கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை அமல்படுத்துதல்
3. சுகாதார மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.
4. முன் மாதிரி மாவட்டமாக உருவாக்குதல்.
5. தொழிற்பேட்டை அமைத்து வேலை வாய்ப்பை உருவாக்குதல்.
6. கீழக்கரை ஜின்னா தெருவில் அமைந்துள்ள பால சுப்ரமணியம் கோயிலை பராமரித்தல்.

போன்ற பல வகையான கோரிக்கைகளை ஈமான் தலைவர் ஹபீபுல்லாஹ், பொதுச் செயளாலர் ஹமீது யாசின் மற்றும் பொது மக்கள் சார்பாக வைப்பட்டது.

இந்நிகழ்சியில் பேசிய எம்.பி நவாஸ் கனி கோர்க்கைளை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன் என்ற உறுதி மொழியோடு முன் மாதிரி எம்.பி யாக திகழ்ந்து முன்னேறிய மாவட்டமாக உருவாக பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.

இறுதியாக வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நல்ல வேட்பாளர்களை அடையாளம் கண்டு நகர் மன்றத்துக்கு தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என்றும் ஊழலற்ற நகராட்ச்சியை இருக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு உரையை நிறைவு செய்தார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக ஜமால் முஹம்மது கல்லூரி துணை முதல்வர், ஈமான் அமைப்பின் தலைவர் ஹபீபுல்லாஹ், ஈமான் அமைப்பின் பொதுச்செயளாலர் ஹமீது யாசின், அலைட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் டைரக்டர் கமால் மற்றும் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், கீழக்கரை வடக்குத் தெரு சமூக  நல அமைப்பு (NASA) நிர்வாகிகள் சார்பாக பொன்னாடை போர்தப்பட்டது மற்றும் பல கீழக்கரை சமூக நல அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered