திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு திட்டத்தின் 4 ஆம் கட்டத்தை இணைந்து அறிவிக்கின்றன

ஆம்வே இந்தியாவும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு திட்டத்தின் 4 ஆம் கட்டத்தை இணைந்து அறிவிக்கின்றன.இத்திட்டத்தை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஸ்ரீ திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள், மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாவட்ட நீதிபதி எம். விஜயலட்சுமி ஐ.ஏ.எஸ்., ஆகியோர் ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் திட்டங்களின் துணைத் தலைவர் திரு. ராஜீவ் தாஸ் குப்தாவுடன் இணைந்து திறந்துவைத்தனர்.

ஆம்வே இந்தியாவின் சி.இ.ஓ.வான அன்ஷு புத்ராஜா, திட்டத்தின் நான்காம் கட்டத்தை அறிவித்துவிட்டுக் கூறினார், “ஆம்வேயில் சமூகத் தொழில்முனைவோரை உருவாக்கவும் தண்ணீர்த் தேவையால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கவும், மாவட்டத்தின் 4000 கிராமவாசிகளுக்கும் மேலானவர்களுக்குப் பயனளிக்கும் பணியைப் புரியவும் உதவிபுரிந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாவட்ட நீதிபதி எம். விஜயலட்சுமி ஐ.ஏ.எஸ். அவர்கள் மற்றும் முழுமையான நிர்வாகத்தின் கூட்டாண்மை மற்றும் உறுதிப்பாட்டுக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.”

ஆம்வேயின் நீர்ப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தின் நீர் கொண்டுவரும் காலவாய்களைத் தூர் வாருவதில் இருந்து தடுப்பு மற்றும் கல்லணைகளை கட்டுவது வரை, இந்தத் திட்டம் திண்டுக்கல் மாவட்ட கிராமங்களின் நீர்ப் பற்றாக்குறையை குறைத்ததோடு மட்டுமல்லாமல், மழைநீர் சேமிப்போடு அப்பகுதியில் இருக்கும் கிணறுகளில் நீரை மீட்டமைக்கவும் செய்தது.

ஆம்வே இந்தியாவின் உற்பத்தி மற்றும் சிறப்புத்திட்டங்களின் துணைத் தலைவர் ராஜிவ் தாஸ் குப்தா, நீர் திட்டத்தின் 3 வது கட்டத்தில், மாவூர் கண்வாய் முதல் ஓணான் ஓடை வரை – தோராயமாக 21கி.மீ. நீளமுள்ள நீர் கொண்டுவரும் ஆறு கால்வாய்களை மீட்டமைத்துள்ளோம். மேலும், நாங்கள் பொந்துப்புளி ஓடையில் கேபியன் அமைப்போடு கூடிய ஒரு தடுப்பு அணையும், மழை பெய்யும் போது தண்ணீரைத் தடுக்க ஒரு கல் அணையும் அமைத்துள்ளோம். இத்திட்டத்தின் மூலம் 19 கோடி லிட்டர் மழை நீரைத் தேக்க முடியும். இதனுடன் அப்பகுதியில் உள்ள 384 திறந்த கிணறுகளையும் 295 ஆழ்துளைக் கிணறுகளையும் நிரப்பலாம். “

நீர்ப்பாதுகாப்புத் திட்டத்தை 2016 இல் ஆம்வே முன்னெடுத்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆம்வேயின் உற்பத்தி நிலையத்தின் அருகில் உள்ள ஏழு கிராமங்கள் இதன் மூலம் பயனடைகின்றன. முதல் இரண்டு கட்டங்களால் நிலத்தடி நீர் மட்டம் 2016 ஜனவரியில் 490 அடியிலிருந்து 2017 டிசம்பரில் 255 அடியாக உயர்ந்தது. இந்த திட்டம் 1000 ஹெக்டேர் பரப்பளவுக்குப் பரந்து 2,000 கிராம மக்களுக்குப் பயனளித்தது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தைத் திண்டுக்கல்லில் செயல்படுத்த, நீர்ப் பாதுகாப்பில் தனிச்சிறப்பு வாய்ந்த கிரீன் வென்ச்சர் என்ற நிறுவனத்துடன் ஆம்வே இந்தியா கூட்டு சேர்ந்துள்ளது.இந்நிகழ்வில் ஆம்வே நிறுவனம் சார்பில் திரு.ராஜ் நரேன், திரு.சிவகுமார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி விஜயலட்சுமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள்,பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..