ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பிரிவில் உள்ள வீட்டில் 15,000 ரூபாய் மதிப்புள்ள கம்பர்சன் மின் மோட்டார் திருட்டு

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பிரிவு அருகே பாளையங் கோட்டை செல்லும் வழியில் உள்ள யோகம் நகரில் சந்திரன் S/O பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்- கொடைக்கானல் தனியார் பேருந்தில் பயணச்சீட்டு பரிசோதகராக பனியாற்றி வருகிறார். இவர் பனிக்கு செல்லும் நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்துகொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் அவரது வீட்டில் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக வைத்திருந்த சுமார் 15,000 ரூபாய் மதிப்புள்ள கம்பர்சன் மின் மோட்டாரை இரவில் திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image