திண்டுக்கல் ரயில் நிலையத்தில் லிப்ட் வேலை செய்யாததால் மாற்றுத்திறனாளிகள் முதியோர் கடும் அவதி..

திண்டுக்கல் ரயில் நிலையம் தமிழகத்தின் மிக முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் முப்பதுக்கும் மேற்பட்ட ரயில்கள் தினசரி வந்து செல்கின்றன.இந்த ரயில்களில் பயணிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி வந்து செல்கிறார்கள். இவர்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் அடக்கம். இவ்வாறு வருகைதரும் மாற்றுத்திறனாளிகள் அனைத்து நடைமேடைகளுக்கும் சென்றுவர லிப்ட் வசதி இல்லாமல் இருந்தது.எந்த நடைமேடைக்கு செல்ல வேண்டும் என்றாலும் முப்பதுக்கும் மேற்பட்ட படிகளை ஏறி இறங்க வேண்டிய நிலை இருந்தது.

மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் எளிதாக வந்து செல்ல வசதியாக லிப்ட் வசதி ஏற்ப்படுத்தி தர வேண்டும் என திண்டுக்கல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தொடர்ச்சியாக போராடியதன் பலனாக கடந்த ஆண்டு லிப்ட் வசதி அனைத்து நடைமேடைகளுக்கும் செல்லும் வகையில் ஏற்ப்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது பலகட்ட போராட்டங்களை நடத்தி பெறப்பட்ட லிப்ட் வசதி பலநேரங்களில் பழுதாகி யாருக்கும் பயன்படாமல் உள்ளது. கடந்த 30.11.19 அன்று டெல்லியில் மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி TARATDAC சங்கத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் நாற்பதுக்கும் மேற்ப்பட்டோர் இரவு 03.00 மணியளவில் திண்டுக்கல் திரும்பினர். கை, கால் ஊனமுற்றவர்கள், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என கடுமையாக ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் நான்காவது நடைமேடையில் இருந்து ரயில் நிலையத்திற்கு வெளியே வர நாற்பதுக்கும் மேற்ப்பட்ட படிக்கட்டுகளை ஏறி இறங்குவதற்குள் ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் அதுவும் தான் கொண்டுவந்த பைகளையும் தூக்கிக்கொண்டு, கொட்டும் மழையில் நனைந்துகொண்டு வெளியே வருவதற்குள் மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி வந்தது.

யாருடைய தேவைக்காக லிப்ட் வசதி ஏற்ப்படுத்தப்பட்டதோ அவர்களுக்கு அது பயன்படாமல் வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் படும் இன்னல்களை கருத்தில்கொண்டு உடனடியாக போர்க்கால அடிப்படையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் லிப்ட் சரிசெய்யப்பட வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை திரட்டி திண்டுக்கல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..