நிலக்கோட்டை அருகே கிராம மக்கள் சாலையில் நீர் தேங்கியதால் நாற்று நடும் போராட்டம் 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் உள்ள சிரகம்பட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வாழும் விவசாயிகள் பெரும்பாலும் கூலி வேலை பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.. கிராமத்தில் சாக்கடை வசதி சரியாக இல்லாமல சாக்கடை நீரும் மழை நீரும் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனை முறைப்படுத்த வேண்டி உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் கிராமப்புற ஊராட்சி அதிகாரிகளிடம் பல தடவை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கிறார்கள்..  இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர் சாரல் மழை பெய்ததால் சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கி நின்றது அதனால் இப்பகுதியில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் முதியவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்பட்டனர்.. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உடனடியாக நாற்று நடும் போராட்டம் நடத்தினார்கள். கிராம மக்கள் இதே நிலை நீடித்தால் கிராமத்தில் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர்..      மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்து பல்வேறு போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தார்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..