நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி துவங்கி நவ.30 முதல் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் நெல்லை மாவட்ட மக்களின் பழமையான பாரம்பரிய பொருட்கள் 200 க்கும் மேற்பட்டவை இடம் பெற்றிருந்தன .அதில் உலோகப் பொருள்கள், மரச்சாமான்கள், பனை ஓலை பொருட்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன.நவ.30 அன்று துவங்கி உள்ள இக்கண்காட்சி டிசம்பர் 6 ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.முன்னோர்களின் பாரம்பரிய பெருமையினை விளக்கும் இக்கண்காட்சி அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.அந்த வகையில் எராளமான பள்ளி மாணவ மாணவிகள் இக்கண்காட்சி யினை கண்டு ரசித்தனர். இக் கண்காட்சியில் எழுத்தாளர் நாறும்பூநாதன், பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர். பேரா, கவிஞர்.சுப்பையா,அம்பை கல்லூரி பேராசிரியர்கள் தங்க செல்வி,மாரியம்மாள், கலை ஆசிரியர் சொர்ணம், சங்கரன் கோவில், வீரசிகாமணி விவேகானந்தா பள்ளி முதல்வர் கோமு செல்லம், சிவந்தி பட்டி தாயுமானவர் பள்ளி முதல்வர் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி சிறப்பாக செய்திருந்தார்.இந்த கண்காட்சி குறித்து பொதிகை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா கூறியதாவது:

அரசு அருங்காட்சியகத்தில் அறிய வேண்டிய அரும் பொருட்கள் ஏராளமாக உள்ளன. நமது பழமையைப் போற்ற வேண்டியது அவசியம் ஆகும். பழமை மாறாமல் புதுமையைப் படைக்கலாம்.பழமை என்பது செடியை,மரத்தைத் தாங்கும் வேர்களாகும். வேர்களைக் காக்க வேண்டிய அவசியத்தை இன்றைய இளம் தலை முறையினரிடையே கொண்டு செல்ல வேண்டியது மூத்தோர்களாகிய நமது கடமையாகும். அந்த விழிப்புணர்வை ஏற்படுத்திட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளுக்கும் முயற்சிகளுக்கும் துணையாக மட்டுமின்றி தூணாகவும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் இருக்கும்” என கவிஞர்.பேரா தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..