குறிச்சிகுளம் அருகே பெயரளவில் நடைபெற்ற குடிமராமத்து பணி- பல்லிக்கோட்டை கால்வாய் உடையும் அபாயம்

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா குறிச்சிகுளம் அருகே பல்லிக்கோட்டை கால்வாய் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீர் வழி கால்வாய் ஆக்கிரமிப்பே இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.கடந்தாண்டு கால்வாய் பகுதியில் முறையாக குடி மராமத்து பணி செய்யாததால் கரையை உயர்த்தாததால் இன்னும் மானூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வருவது தடை பட்டுள்ளது. இதனால் உபரி நீரை சிற்றாற்றில் திறந்து விட்டதால் சிற்றாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி சீவல்பேரி அருகே தாமிரபரணியில் சேர்ந்து கடலுக்கு செல்கிறது.இதனால் மானூர், பள்ளமடை , பல்லிக்கோட்டை ஆகிய குளங்கள் சரியாக நிரம்பவில்லை.சில குளங்களுக்கு இன்னும் தண்ணீரே வரவில்லை. ஆனால் வீணாக தண்ணீர் கடலுக்கு செல்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். நீர்வழி கால்வாயில் உள்ள விவசாய ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாய் கரையை பலப்படுத்தி அதிகப்படியாக கால்வாயில் தண்ணீரை திறக்க விவவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..