“கிணற்றை காணோம்” என்ற ரீதியில் பெய்த மழைக்கு காணாமல் போன பெரியபட்டிணம் கப்பலாற்று தடுப்பணை…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டிணம் கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக நீர்வளம் பாதுகாப்பு அரணாக விளங்கக்கூடிய கப்பலாற்று தடுபாணை சரியான வழுமுறைகள் பின்பற்றி தரமாக  கட்டமைக்கப்படாத காரணத்தால் நேற்று (30-11-19) இரவு பெய்த மழையில் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் உடைக்கப்பட்ட கப்பலாற்று தடுபாணையை சரிசெய்யும் பணியில் இன்று (01-12-19) பெரியபட்டிண ஊராட்சி செயலாளர் சேகு ஜலால் , முத்துப்பேட்டை ஊராட்சி செயலாளர் அம்மாசி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் JCB இயந்திரத்தை தயார்செய்து,  பெரியபட்டிண இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கூடுதல் சேதம் அடையாமல், இயன்ற அளவு நீர்வளத்தை பாதுகாக்க உடைந்த கப்பலாற்று தடுபாணையை சரி செய்யும் பணியை செய்து வருகின்றனர்.

ஆனால் இப்பணிநம் தரமில்லாமல் செய்த ஒப்பந்தகாரர் மற்றும் ஊராட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா??..

புனித ரமலான் வாழ்த்துக்கள்..