உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு கறிவிருந்து படைத்து, கல்விக்கு உதவிய உதயநிதி ரசிகர்கள்

உசிலம்பட்டி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு கறிவிருந்து படைத்து, கல்விக்கு உதவிய உதயநிதி ரசிகர்கள்.நடிகரும், திமுகவின் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 42வது பிறந்தநாள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திமுக தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.இதன் ஒருபகுதியாக இன்று 30.11.19 உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்ட உதயநிதி நற்பணி மன்றம் சார்பில் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு கிடா வெட்டி கறி விருந்து வைத்து கொண்டாடினர்.

மேலும் இந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் நோட், புக், பேனா வழங்கிய நற்பணி மன்றத்தினர் தொடர்ந்து இந்த குழந்தைகள் கல்விக்கு பல்வேறு உதவிகளை செய்வோம் என உறுதியளித்தனர்.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..