Home செய்திகள் உசிலம்பட்டியில் முகூர்த்தநாளை முன்னிட்டு மல்லிகைப்பூ கிலோ ரூ3000க்கு விற்பனை.

உசிலம்பட்டியில் முகூர்த்தநாளை முன்னிட்டு மல்லிகைப்பூ கிலோ ரூ3000க்கு விற்பனை.

by mohan

உசிலம்பட்டியில் முகூர்த்தநாளை முன்னிட்டு மல்லிகைப்பூ கிலோ ரூ3000க்கு விற்பனை. வுரத்து குறைவால் வுpயாபாரிகள், விஷேச வீட்டார்கள் மல்லிகைப்பூ கிடைக்காமல் அவதி அடைந்தனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளான வகுரணி, சந்தைப்பட்டி, கல்லூத்து, கல்யாணிபட்டி போன்ற பகுதிகளில் மல்லிகைப் பூ அதிகம் பயிரிட்டுள்ளனர். ஆனால் கார்த்திகை மாதம் பனிகாலம் என்பதால் மல்லிகைப் பூ வரத்து மிகவும் குறைவாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை மாதத்தில் முதல் முகூர்த்த நாள் என்பதால் உசிலம்பட்டி பூமார்கெட்டில் மல்லிகைப் பூவின் விலை 1கிலோ ரூ 3000 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஆனால் மாலை மல்லிகைப்பூ வரத்து இல்லாததால்; உசிலம்பட்டி பூ மார்கெட்டில் மல்லிகைப்பூ கிடைக்கவில்லை.இதனால் மல்லிகைப்பூ வியாபாரிகள் மற்றும் விஷேச வீட்டார் பூ கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர். சந்தைக்கு மல்லிகைப்பூ வரத்து குறைந்ததால் வியாபாரிகள் அனைவரும் அருகிலுள்ள வத்தலகுண்டு, நிலக்கோட்டை, மதுரை மாட்டுத்தாவணி மார்கெட்டிற்கு படையெடுக்க தொடங்கினர். ஆனால் உசிலம்பட்டியில் மல்லிகைப்பூ தவிர மற்ற பூக்களின் விலை குறைவாகத்தான் விற்பனை செய்யப்பட்டன.. பிச்சி பூ 300 ரூபாய்க்கும், செவ்வந்திபூ 200க்கும், கோலிகொண்டை, 150க்கும், சம்பங்கி 200க்கும், கனகாம்பிரை பூ 100க்கும், துளசி 1கட்டு ரூ 100க்கும் விற்பனை செய்யப்பட்டன.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!