Home செய்திகள் ராமநாதபுரத்தில் 491 பயனாளிகளுக்கு ரூ.5.74 கோடி நலத்திட்ட உதவிகள்

ராமநாதபுரத்தில் 491 பயனாளிகளுக்கு ரூ.5.74 கோடி நலத்திட்ட உதவிகள்

by mohan

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராமநாதபுரம் சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 491 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி 74 லட்சத்து 54 ஆயிரத்து 500 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ்,ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்.இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ்பேசியதாவது:தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம்கள் நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்கள், 400 வருவாய் கிராமங்கள் மற்றும் நகராட்சி பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளில் கடந்த ஆக.21 முதல் ஆக.31 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 9,302 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தகுதியான 5,180 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை தாலுகாகளில் 3,235 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 1,833 தகுதியான மனுக்கள் ஏற்பு செய்யப்பட்டு ராமநாதபுரம் தாலுகாவில்246 பயனாளிகளுக்கு ரூ.43.42 லட்சம், ராமேஸ்வரம் தாலுகாவில்27 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 89 லட்சத்து 50 ஆயிரம், கீழக்கரை தாலுகாவில்218 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 41 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.பட்டா மாறுதல் ஆணை, அடிப்படை சான்றுகள் போன்ற பணப் பயனற்ற பொது கோரிக்கை மனுக்ள் 1,342 மனுக்கள் தகுதியானவையாக கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.இவ்விழாவில் ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்திரா சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ச.சிவசங்கரன், உதவி ஆட்சியர் பயிற்சி ஜெ.சரவணக் கண்ணன் ராம்கோ கூட்டுறவு தலைவர் செ.முருகேசன், தாசில்தார்கள் முருகவேல் (இராமநாதபுரம்), ஜப்பார் (இராமேஸ்வரம்), வீரராஜ்(கீழக்கரை) , வருவாய் ஆய்வாளர்கள் பாலசுப்ரமணியன் (தேவிபட்டினம்), ராஜேஸ்வரி(மண்டபம்) பாலகிருஷ்ணன் (இராமேஸ்வரம்), உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!