தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் குழந்தைக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மதுரை அப்பல்லோ மருத்துவமனை சாதனை

தென் தமிழகத்தில் முதன்முறையாக தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் குழந்தைக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மதுரை அப்பல்லோ மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.குழந்தைகளின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான கைதேர்ந்த நிபுணர்கள் மற்றும் சிறப்பு மையங்களின் பற்றாக்குறை நிலவுவதால், கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் சிகிச்சையளிக்கப்படாமலே இருக்கிறார்கள். மேலும் சிகிச்சையைப் பெறுவதற்காக சென்னைக்குச் செல்லும் சுமையை பல குழந்தைகள் இங்கு தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். என்று அப்போலோ மருத்துவமனையின் மூத்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் முருகன், தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் பத்மபிரகாஷ் தெரிவித்தனர்.

இது குறித்து மதுரை அப்போலோ மருத்துவமனைகளின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் கூறுகையில் ;குழந்தைகளுக்கு கல்லீரலின் ஒரு சிறிய அளவு மட்டுமே தேவைப்படுவதால், நன்கொடையாளர்கள் தங்கள் கல்லீரலில் மிகச் சிறிய பகுதியை மட்டுமே தானம் செய்ய வேண்டும், இதில் நன்கொடையாளர்க்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குழந்தைகளுக்கு, வழக்கமாக பெற்றோர்களில் ஒருவர் நன்கொடையாளராக அமைவது குழந்தையின் நோயெதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கான நன்கொடை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த நடைமுறையை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை செய்து முடித்துள்ளது. சுமார் பத்து மணி நேரம் வரை நடந்த இந்த அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் மனிஷ் வர்மா,மதுசூதனன், சசிதர்,ஆனந்த் ராமமூர்த்தி, மஞ்சுநாத், ரகுவம்சி சைத்ரா ஆகியோர் அடங்கிய குழுவினரால் செய்யப்பட்டது என்று கூறினார்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..