இராமநாதபுரம் மாவட்டத்தில் ரத்த தான முகாமில் ரெட் கிராஸ் சொசைட்டி முதலிடம்

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி, எய்ட்ஸ் தடுப்பு சங்கம் சார்பில் தேசிய ரத்த தான தின விழா நடந்தது. இதையொட்டி ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார். ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் வரவேற்றார். சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் வெங்கடாசலம், சுகாதாரத் துறை துணை இயக்குநர் குமரகுருபரன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர்லால், ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஹாரூண், மாவட்ட செயலர் ராக்லாண்ட் மதுரம், முகமது சதக் தஸ்தகீர் பி.எட்., கல்லூரி முதல்வர் சோமசுந்தரம், டாக்டர் ஜோசப் ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 14 முகாம்கள் நடத்தி 800 யூனிட் ரத்தம் சேகரித்த ரெட் கிராஸ் சொசைட்டி முதலிடம், 8 முகாம்கள் நடத்திய தவ்ஹீத் ஜமாத் இரண்டாம் இடம், 5 முகாம்கள் நடத்திய தமுமுக., மூன்றாம் இடம் பிடித்தன. இந்த அமைப்பு நிர்வாகிகள், மேலும் முகாம்கள் நடத்தி ரத்தம் சேகரித்த நிர்வாகிகளை கவுரவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் விருது வழங்கி பாராட்டினார். அரசு ரத்த வங்கி டாக்டர் பாத்திமா பத்தூல் ராணி நன்றி கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..