பேரிடர் மேலாண்மை பயிற்சி

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது .ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை தீயணைப்பு துறை அலுவலர் நாகராஜ் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி என்பதை நேரடி செயல் விளக்கத்தின் மூலம் செய்து காண்பித்து விளக்கினார்.நிகழ்வில் தேவகோட்டை தீயணைப்பு நிலையத்தை சார்ந்த முன்னனி தீயணைப்போர் ரவிமணி ,தீயனைப்போர் தமிழ்செல்வம் , வசந்தகுமார் ,கண்ணன்,சத்யராஜ் ,மகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.மாணவர்கள் ஜோயல்,அய்யப்பன்,சிரேகா,ஜனஸ்ரீ,பாலசிங்கம் ,திவ்யதர்ஷினி ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெற்றனர்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..