மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்

இன்றைய குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் (Mobile Phone) என்பது சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த முந்தைய காலத்தில் விளையாட்டு பொருட்களை காட்டியும், வேடிக்கை காட்டியும் சமாதானப்படுத்தும் பழக்கம் இருந்து வந்தது ஆனால் தற்போது அது மறைந்து அழுது அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு செல்போனை கொடுத்து சமாதானப்படுத்தும் நடைமுறை தற்போது அதிகரித்துள்ளது.

இதனால் குழந்தைகள் சமாதானம் ஆகலாம், ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து செல்போன், டேப்லட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றினால் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. இதனால் நாளடைவில் எலும்புகள் தேய்மானம் அடைந்து பல பிரச்னைகளை சிறு வயதிலேயே அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. பிற்காலத்தில் இது ஆபத்தான விளைவுகளைக்கூட உண்டாக்கிவிடும்.

*குழந்தைகள் நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துவதினால் செல்போன் கதிரியக்கமானது அவர்களை பெரிதும் பாதிக்கின்றது. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சுகள் குழந்தைகளை எளிதில் தாக்கும். இதனால் அவர்களுக்கு பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.*உங்கள் குழந்தை செல்போன் பயன்படுத்துவதால் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள்.*ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்பட்டு விழிகள் உலர்ந்து போய் பார்வைத்திறன் பாதிக்கப்படுகின்றது. இதனால் இளம் வயதிலேயே கிட்டப்பார்வை குறைபாடுகளும் ஏற்பட்டு விடுகின்றது.

*செல்போனுக்கு அடிமையான குழந்தைகள் யார் முகத்தையும் பார்த்துப் பேசுவதில்லை. மற்றவர்களோடு பழகவோ பிற குழந்தைகளோடு இணைந்து விளையாடவோ தெரியாமல் தனிமைப்பட்டு விடுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும்.*உங்களது செல்போனை குழந்தைகளிடம் கொடுக்கும் போது அதனை ஏரோ பிளைன் மோடில் போட்டு அவர்களிடம் கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு கதிரியக்க பாதிப்பு உண்டாகாமல் தவிர்க்கலாம்.*குழந்தைகள் முன் பெரியவர்களாகிய நாம் செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.*வீட்டுக்கு வெளியே போய் விளையாடும் பழக்கத்தை உங்களது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image