ராமநாதபுரத்தில்அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

அங்கன்வாடி தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் சைல்டு லைன் 1098 சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. சைல்டுலைன் ஆற்றுபடுத்துநர் கலா வரவேற்றார். இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார். இராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) ஜெயந்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி நோக்கம் குறித்து தேவிபட்டினம் சைல்டு லைன் துணை மையம் இயக்குநர் தேவராஜ் பேசினார். குழந்தைகள் பிரச்னைகள் குறித்து குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜ், இளஞ்சிறார் நீதி குழும உறுப்பினர் தசரத பூபதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் மகேஸ்வரன், மாவட்ட சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் தனம் , சைல்டு லைன் இயக்குநர் கருப்பசாமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் சிவராணி, சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் பேசினர். 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். சைல்டுலைன் பணியாளர் சின்னப்பன் நன்றி கூறினார். சைல்டு லைன் அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணியாளர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..