பல்வேறு வகையான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி,பெருந்துறை எம். எல். ஏ.தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் நடைபெற்றது..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 1044 நபர்களுக்கு ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளின் தொகுப்பு வழங்கும் விழா பெருந்துறை சக்தி திருமண மண்டபத்தில் 22-11-2019 நடைபெற்றது.

விழாவில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் திரு.பி.முருகேசன்  தலைமை தாங்கினார். பெருந்துறை வட்டாட்சியர் திரு.கே.துரைசாமி வரவேற்புரை வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அமுதா  முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற மதிபீட்டுக்குழு தலைவரும், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமாகிய .என்.டி.தோப்பு வெங்கடாச்சலம்  கலந்துகொண்டு 216 பயனாளிகளுக்கு ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கியும், 329 பயனாளிகளுக்கு ரூ.39.48 லட்சம் மதிப்பீட்டில் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை வழங்கியும், 172 பயனாளிகளுக்கு ரூ.20.64 லட்சம் மதிப்பீட்டில் இந்திராகாந்தி விதவை உதவித்தொகை வழங்கியும், 6 பயனாளிகளுக்கு ரூ.72000 மதிப்பீட்டில் இந்திராகாந்தி மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்கியும், 28 பயனாளிகளுக்கு ரூ.3.36 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்கியும், 20 பயனாளிகளுக்கு ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் ஆதரவற்ற விதவைகள் உதவித்தொகை வழங்கியும், 19 பயனாளிகளுக்கு ரூ.2.28 லட்சம் மதிப்பீட்டில் கணவரால் கைவிடப்பட்டவர் உதவித்தொகை வழங்கியும், 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்கியும், 150 பயனாளிகளுக்கு ரூ.63000 மதிப்பீட்டில் புதிய குடும்ப அட்டை வழங்கியும், 7 பயனாளிகளுக்கு ரூ.32010 மதிப்பீட்டில் தையல் இயந்திரம் வழங்கியும், 32 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்திரவு வழங்கியும், 27 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல் உத்திரவு வழங்கியும், 18 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கியும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முடிவில் வட்ட வழங்கல் அலுவலர் சாவித்திரி  நன்றியுரை வழங்கினார். உடன் மண்டல துணை வட்டாட்சியர்கள் தாமோதரன் மற்றும் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், நில வருவாய் ஆய்வாளர்கள் கதிர்வேல், தினேஷ், சத்தியபாமா, கலைவாணி, சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள், அவைத்தலைவர் சந்திரசேகரன், பெருந்துறை ஒன்றிய கழக செயலாளர் விஜயன், வேளாண் விற்பனை கூட்டுறவு சங்க துணை தலைவர் டி.டி.ஜெகதீஸ், பெருந்துறை ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பெரியசாமி, அருள்ஜோதி செல்வராஜ், பேரூர் கழக செயலாளர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image