நமது செய்தி எதிரொலியாக சுத்தம் செய்யப்பட்ட காய்ந்த மரக்கிளைகள்

மதுரை பைபாஸ் ரோடு எல்லிஸ் நகர் 70 அடி சாலையில் வெட்டப்பட்ட மரக் கிளைகள் அரசுப் போக்குவரத்துக் கழக பொன்மேனி பணிமனை கிளையில் போக்குவரத்துக்கு டீசல் நிரப்பும் பங்க் அருகே சுற்றுச் சுவரை ஒட்டி இருந்தது. விபத்து ஏற்படும் முன் அகற்ற வேண்டுமென இதை பற்றிய செய்தி நமது தளத்தில் நேற்று வௌியானது. இதனை அடுத்து நமது செய்தி எதிரொலியாக மரக்கிளைகளை அரசு போக்குவரத்து கழகமும் மாநகராட்சியும் இணைந்து இன்று22.11.19 அதிகாலை அகற்றினார்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்த அரசு போக்குவரத்து கழகத்துக்கு மாநகராட்சி ஊழியர்களுக்கும் நமது தளத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..