காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

மதுரை காவல்துறை ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம்.,  உத்தரவின் பேரில் மதுரை திலகர்திடல் காவல் நிலையத்தின் சார்பில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் சிம்மகல் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது.இதில் காவல்துறை உதவி ஆணையர் வேனுகோபால்  தலைமை வகித்து பொது மக்களுடனான காவல்துறையின் நட்புறவுக்கு தகுந்த ஆலோசனைகள் மற்றும் மக்களுக்கான பயனுள்ள விழிப்புணர்வுகளை வழங்கினார்.திலகர் திடல் காவல் நிலைய ஆய்வாளர் .பிளவர்ஷீலா அவர்கள் பொதுமக்களுக்கான காவல்துறையின் பல்வேறு செயல்பாடுகளை விளக்கினார்.

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது வாழ்த்துரையில் காவல் துறையின் சிறந்த செயல்பாடுகளையும் மக்கள் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினார்.நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த வார்டு காவல்துறை பொறுப்பாளரும் துணை ஆய்வாளருமான அப்துல் ரஹீம் மக்கள் தெரிவித்த குறைபாடுகளை குறித்துக் கொண்டதோடு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.இதில் துணை ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன், .பாண்டி, திரு.பாலசுப்பிரமணியன் மற்றும் .சூசைஉட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..