கட்சித் தலைவர்கள், மற்றும் தொன்டர்கள் என 1000 பேர் மீது வழக்குப் பதிவு..!

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பைமறுஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன், திருமாவளவன், வேல்முருகன், உள்ளிட்ட 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மற்றும் சுப உதயகுமார், திருமுருகன் காந்தி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பாபர் மசூதி வழக்கின்தீர்ப்பை மறுஆய்வு செய்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பபட்டன. இதனையடுத்து அனுமதியின்றி கூடி உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மற்றும் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக, ஆயிரம் பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..