பேரையூர் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரகேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வத்திராயிருப்பு சாலை மற்றும் பேரையூர் முக்கிய தெருக்களான சுப்மிரமணி கோவில் தெரு போன்ற பகுதிகளில் தினமும் கொட்டப்படும் குப்பைகளை அகற்றபடாததால் சுகாதாரகேடு ஏற்படுவதுடன் தொள்றுநோய் ஏற்படும் அபாயம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் சாலை ஓரங்கள் மட்டுமல்லாமல் தெருக்களில் உள்ள சாக்கடைகளையும் சுத்தம் செய்யாததால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

குப்பைகளை அகற்றாததால் துர்நாற்றம் வீசுவதால் சாலைகளில் செல்லும் வாகன ஒட்டிகள் பெரும் சிரமபட்டு வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் குப்பைகளை அகற்றாமல் மெத்தப்போக்காக செயல்பட்டு வருகின்றனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..