பரமக்குடியில் 1,406 பேருக்கு ரூ.1.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பாகதமிழகமுதல்வரின் சிறப்பு குறை தீர் திட்டத்தின்” கீழ் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ்தலைமை வகித்தார்.விழாவில், வருவாய் பேரிடர் மேலாண் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட ‘முதல்வரின் சிறப்பு குறை தீர் திட்ட முகாம் மூலம் மக்களிடமிருந்து பெறப்பட்ட10 லட்சம் மனுக்கள் ஆய்வு செய்து தகுதியான மனுக்கள் மீது 40 நாட்களுக்குள் தீர்வு கண்டு பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.முதியோர் உதவித் தொகை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மனுதாரர் குடியிருக்கும் வீட்டின் மதிப்பு ரூ.50 ஆயிரத்தை ரூ.ஒரு லட்சம் என நிர்ணயிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளித்து தமிழக பொதுப்பணித்துறையின் கீழ் 15 ஆயிரம் கண்மாய்கள் மற்றும் ஏரிகள்,உள்ளாட்சித் துறை சார்பில் 25 ஆயிரம் கண்மாய்கள், ஊரணிகள் தேர்வு செய்யப்பட்டு புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை,திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரம்,விவசாயத்திற்கு நீர் பாசன வசதி பெறும் வகையில் காவிரி குண்டாறு வைப்பாறு நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆலோசனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இவ்வாறு அவர் பேசினார். விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.சதன் பிரபாகர் (பரமக்குடி), எஸ். கருணாஸ் (திருவாடானை), எஸ்.பாண்டி (முதுகுளத்தூர்), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சி.ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் எஸ்.சிவசங்கரன் ஆகியோர்
கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image