உயிர் மனிதர்களிடம் மரத்துப்போன மனிதநேயம்.. நாம் கற்றுக்கொள்ளவேண்டும் விலங்குகளிடம்…

மதுரை பைபாஸ் சாலையில் நேரு நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு நாய்க்குட்டி தன் தாயுடன் சுற்றி வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த குட்டி நாய் விபத்தில் இறக்க அந்த தாய் நாய் எழுப்பி முயற்சி செய்தது. ஆனால் அது இறந்து விட்டது அதற்கு தெரியவில்லை .எனினும் அதை தூக்கிக் கொண்டு ஒவ்வொரு இடமாக சுற்றிக்கொண்டே இருக்கிறது.  காலை ஒரு காருக்கு அடியில் அந்த நாய் படுத்துஇருந்தது.          காரை வெளியே எடுப்பதற்காக முயற்சித்தும் அப்பொழுது அந்தத் தாய் நாய் முதலில் வெளியே வந்தது. வெளியே வந்தவுடன் .காரை வெளியே வேகமாக எடுத்தவுடன் இறந்து போன குட்டியை வேகமாக தூக்கிக்கொண்டு ஓடி விட்டது. இன்றைய காலகட்டங்களில் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் பிறந்த சில மணி நேரத்திலேயே வீசும் வாழும் மனிதர்களிடம் இருந்து இரண்டு நாள்கள் ஆகியும் தன் குட்டியை இன்னும் வாயில் கவ்விக் கொண்டு தெருத் தெருவாக அலைந்து கொண்டிருக்கும் அந்த நாயிடம் மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உள்ளது .நேசியுங்கள். மனிதநேயத்தை கற்றுக்கொள்ளுங்கள் அந்த மிருகத்துடன் அனைவரும் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..