பத்திரிகை நிருபர் என்ற பெயரில் “பலான” தொழில்.!

சென்னை அடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பாலியல் தொழில் நடத்திய போலி பத்திரிக்கை நிருபர் கைது செய்யப்பட்டார்.!

அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மண்ணூர்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் ஆந்திராவைச் சேர்ந்த பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு அதிரடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மருதராஜ் என்பவர் போலி பத்திரிக்கை அடையாள அட்டையை வைத்து கூட்டாளிகளுடன் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார், 3 இளம்பெண்களையும் மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..