முடங்கியது உசிலம்பட்டி.58 கால்வாய் பாசன விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு வெற்றி.

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 காலவாயில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வெளியிட வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக இன்று உசிலம்பட்டியிலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. லாரி ஆட்டோ வேன் ஓடவில்லை.பெட்ரோல் பல்க் மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.பேருந்துகள் இயங்கினாலும் மக்கள் கூட்டமில்லை.அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமலிருக்க போலிசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.மொத்தத்தில் 58   கால்வாய் பாசன விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.முன் எப்போதும் இல்லாத வகையில் இன்று முழுவதுமாக முடங்கியது.போராட்டத்தில் கலந்து கொண்டவா்கள் மற்றும் விாிவான செய்தி –

உசிலம்பட்டி தேவர்சிலை முன்பு ஒன்றிணைந்த விவசாயிகள் மற்றும் வர்த்தக சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம் 58 கிராம பாசான விவசாயிகள் சங்கத்தினர்.ஜெயராஜ், பெருமாள், சிவபிரகாசம் .உதயகுமார், தமிழரசன் ஜான்சன் மற்றும் விவசாயிகள், தி.மு.க.நகர செயலாளர் தங்கமலைப்பாண்டி, து.க – ஜெயபிரகாஷ் பிரபு, அஜித் பாண்டிமற்றும் கட்சி நிர்வாகிகள், இ.காங்கிரஸ் நகர் செயலாளர் .மகேந்திரன், தீபா பாண்டி, விஜயகாந்தன்,நர்சு தங்கமணி, அ.இ.பார்வர்ட் பிளாக் முன்னாள் எம்.எல்.ஏ.பி.வி.க திரவன், இராஜா பாஸ்கரப் பாண்டியன், ஆதிசேடன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி நிர்வாகிகள்  அபி மன்னன்  பழக்கடை ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உசிலம்பட்டி வழக்கறிஞர்  சங்கத்தினர் சொக்கநாதன் பாலச்சந்திரன் காக்கியராஜா, செல்லக்கிளி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சுந்தர செலவி ஒச்சர் ததேவர், வல்லரசு பார்வர்ட் பிளாக் அம்மாவாசை இதனால் ஏற்படும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உசிலம்பட்டி பகுதியில் உள்ள ஆட்டோ மற்றும் வாகனங்கள் சங்கத்தினர். அனைத்து அமைப்பினர்கள்உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர் .உசிலம்பட்டி டி.எஸ்.பி.ராஜா, ஆர்.டி.ஓ.செளந்தரியா, தாசில்தார் செந்தாமரை மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..