மதுரை அனுப்பானடியில் ஒருவர் வெட்டிக்கொலை

மதுரை மேல அனுப்பானடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் ரமேஷ் இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் வீட்டினுள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று வீட்டினுள்ளேஅரிவாள் மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தெப்பக்குளம் காவல்துறையினர் உடனடியாக உடலை கைப்பற்றி
உடற்கூராய்வுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் முக்கிய தடயங்களை கைப்பற்றி அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..