தேவிபட்டினம் அரசு பள்ளி வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை அமைச்சரிடம் அளித்த ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வளர்ச்சியில் முன்னுரிமை பெற்ற ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் சிறப்பு எழுத்தறிவு திட்ட தொடக்க விழா பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் நடந்தது.மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ், என். சதன் பிரபாகர், முன்னாள் எம்பி அன்வர் ராஜா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம் ஏ.முனியசாமி, துணை தலைவர் ஜெயஜோதி, ராம்கோ தலைவர் செ.முருகேசன் இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து அடிப்படை எண்ணறிவு , எழுத்தறிவு நூலை வெளியிட்டு
பேசினார். அப்போது, ராமநாதபுரம் வட்டார வள மைய பயிற்றுநர் தேவிபட்டினத்தைச் சேர்ந்த எஸ். உலகுராஜ் விழா மேடை ஏறினார். தான் பயின்ற பள்ளி வளர்ச்சிக்காக ரூ.ஒரு லட்சத்திற்கான காசோலையை அமைச்சரிடம் வழங்கினார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image