ராமநாதபுரம் பகுதியில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் மழைக்கு ஒழுகும் அவலங்கள்

ராமநாதபுரத்திலிருந்து சித்தார்கோட்டை வழியாக புதுவலசை பனைக்குளம் அழகன்குளம் செல்லும் கிராம பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் உள்ள இருக்கை ஜன்னல் மற்றும் மேல்கூறை மிகவும் மோசமாக உள்ளது. இதனால்   சிறு மழை பெய்தாலே இந்த பஸ்களில் மழைநீர் ஒழுகின்றன. இது பேருந்து பயணம் செய்யும் தினசரி பயணம் செய்யும் பயணிகள் பள்ளிக்குச் செல்லும மாணவ மாணவிகளின் சீருடைகள் புத்தகங்கள் மற்றும் முதியவர்கள் மழை நீரால் நனையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.மேலும் பேருந்துக்குள்ளேயே குடை பிடிக்கும் நிலையும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் இவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என இந்தப் பேருந்துகளில் தினசரி பயணம் செய்யும் பொது மக்கள் மற்றும் மக்கள் பாதை பொறுப்பாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..