Home செய்திகள் சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணம்! – குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி விம் பெண்கள் அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.!

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணம்! – குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி விம் பெண்கள் அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.!

by Askar

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணம்! – குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி விம் பெண்கள் அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.!


சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், விமன் இந்தியா மூவ்மெண்ட் பெண்கள் அமைப்பின் சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், இன்று (நவ.19) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விம் அமைப்பின் வடசென்னை மாவட்ட தலைவர் மரியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச்செயலாளர் நஸீரா, மத்திய சென்னை மாவட்ட தலைவர் ரசூல் பாத்திமா, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தஸ்லீமா, மாவட்ட பொதுச்செயலாளர் சாயிரா பானு, வடசென்னை மாவட்ட செயலாளர் சாய்னாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம், நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் வடசென்னை மாவட்ட தலைவர் கதிஜா பீவி மற்றும் மனிதி அமைப்பின் சுதா மற்றும் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி வேண்டி குரல் கொடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த வடசென்னை மாவட்ட தலைவர் மரியம் செய்தியாளர்களிடம் பேசுகையில்; பாத்திமா லத்தீப் மரணத்திற்கு ஐ.ஐ.டியில் நிலவும் சாதி, மதரீதியான பாரபட்ச ஒடுக்குமுறையே காரணம். அதேவேளையில், மாணவியின் தந்தை பாத்திமா லத்தீபின் மரணத்தில் சந்தேகம் உள்ளதையும், அது தொடர்பாக அவர் வெளிப்படுத்தியுள்ள சந்தேகங்களும், மாணவி மரணத்தில் மர்மங்கள் இருப்பதை உணர்த்துகின்றது.

மாணவியின் துறையை சார்ந்த பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் தான் காரணம் என்று தனது மொபைலில் குறிப்பெழுதி வைத்துள்ளார். ஆகவே சுதர்ஷன் பத்மநாபனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால், காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை.

பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் எப்போதும் சிறுபான்மை விரோத போக்குடன் தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாகவும், ஒவ்வொரு தேர்விலும் முதலிடம் வகிக்கும் முஸ்லிம் பெயர்கள் மீது சுதர்ஷன் பத்மநாபன் உள்ளிட்ட பேராசிரியர்கள் சிலர் வெறுப்படைவதாகவும், தனது முஸ்லிம் பெயர் தான் ஐ.ஐ.டி.யில் தனக்கு பிரச்சினை என்றும் தெரிவித்ததாகவும், அதன் காரணமாகவே தான் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாவதாக மாணவி பாத்திமா லத்தீப் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்த போதும், வடமாநிலங்களில் நிலவும் கும்பல் தாக்குதல் அச்சத்தின் காரணமாக அவரை அங்கு சேர்க்காமல், தமிழகம் தான் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி அவரது பெற்றோர் அவரை சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்த்துள்ளனர். ஆனால், சென்னை ஐ.ஐ.டி.யில் சுதர்ஷன் பத்மநாபன் போன்றவர்களால் நிலவும் சாதி, மத ரீதியான வெறுப்பும், ஒடுக்குமுறையும் பாத்திமா லத்தீபை மரணத்தை நோக்கி தள்ளியுள்ளது.

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து வந்த நிலையில், அங்கு மதரீதியான ஒடுக்குமுறையும் குடிகொண்டுள்ளதையும், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலையும் மாணவி பாத்திமா லத்தீபின் மரணம் உணர்த்துகின்றது. மாணவியின் பெற்றோர் அழுகுரலுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இந்தியாவில் சென்னை தான் பெண்கள் பாதுகாப்பில் சிறந்து விளங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், ஐ.ஐ.டி. வளாகத்தில் மட்டும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தமிழக அரசு இதனை கவனத்தில்கொண்டு உயர்கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவி பாத்திமா லத்தீபிம் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவதோடு, குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் விசாரணையை நேர்மையாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும். மாணவி பாத்திமா லத்தீப் மரணத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவின் குடும்பத்தினருடன் இணைந்து விமன் இந்தியா மூவ்மெண்டும் நீதிக்காக குரல் கொடுக்கும்.” என தெரிவித்தார்.

 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!