கீழக்கரை மற்றும் இராமநாதபுரத்தில் சமூக ஆர்வலர்களுக்கு மாநில அளவிளான சுவாமி விவேகானந்தா 2019 விருது..

இன்று (16/11/2019) இராமநாதபுரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் பிறந்த தினம் மற்றும் குழந்தைகள் தினம் 38வது மாநில அளவிளான மனித உரிமை மாநாட்டில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கீழக்கரை அப்பா மெடிக்கல் சுந்தரத்தின் சமூக நல சேவையை அங்கீகரிக்கும் வண்ணம் மாநில அளவிளான விவேகானந்தா 2019 விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர்.A.ஜோசப் வழங்கினார்.

அதே போல்  WOMEN DEVELOPMENT பிரிவில் விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை பேச்சிற்காகவும்,பெண்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் அறிவுரை பகர்தலுக்காகவும் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையத்தில் நிறுவனர் தலைவர் மதிப்புறு முனைவர் கலைவாணிக்கு HCHRP அமைப்பு விருது வழங்கி கௌரவித்தது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ரவிச்சந்திர ராமவன்னி கலந்துகொண்டார்.விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் HCHRP மாநில செயலர் பன்னீர் செல்வம் செய்திருந்தார். மேலும் இந்த விழாவில் ஏராளமான சமூக ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..