திருச்சியில் மாநில தடகள போட்டிகள் ராமநாதபுரம் மாணவியர் பங்கேற்பு

தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில் திருச்சியில் நாளை நடைபெறவுள்ள 62வது குடியரசு தின மாநில தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இராமநாதபுரம் வீராங்கனைகள் புறப்பட்டுச் சென்றனர்.திருச்சி கொங்குநாடு பொறியியல் கல்லூரியில், 62வது மாநில தடகள போட்டிகள் இன்று (நவ.18) நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளவுள்ள, இராமநாதபுரம் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட பரமக்குடி, மண்டபம், ராமநாதபுரம் கல்வி மாவட்டங்களில் நடந்த தடகப் போட்டிகளில் தேர்வான வீராங்கனைகள் உடற்கல்வி இயக்குநர் ராஜசேகர் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் சேவியர் பெனடிக்ட், செல்வகுமார், பாண்டி ஆகியோர் தொண்டி இஸ்லாமிக் மெட்ரிக் பள்ளி பேருந்தில் திருச்சி புறப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, ராமநாதபுரம் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் இயக்குனர் சங்க செயலாளர் ரமேஷ், பரமக்குடி கல்வி மாவட்ட பொறுப்பாளர் பரம்பக்குடி ராஜா சேதுபதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜா ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன், வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜன் செய்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..