அணைப்பட்டி வைகை ஆற்றில் ஐயப்ப பக்தர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி

சென்னையைச் சேர்ந்த சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த மாரியப்பன் மகன்கள் ஜெகன் என்ற சதீஷ்குமார்  36, குமரேசன்  32 ஆகிய இருவர்களும் ஐயப்பனுக்கு மாலை போட்டு இருந்தனர். இவர்கள் இருவரும் பழைய வண்ணாரப்பேட்டையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்கள்.    இந்நிலையில் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக பழனி சென்றுவிட்டு, அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வந்தபோது அந்தப் பகுதிகள் செல்லும் வைகை ஆற்றில் தற்போது அதிகளவு நீர் செல்வதால் கொண்டிருந்த ஒரு பெண் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.   இதை அறிந்த இரண்டு பேரும் காப்பாற்ற சென்றுள்ளார்கள். அப்போது தண்ணீரின் ஆழம் தெரியாமல் இறங்கியதால் இரண்டுபேரையும் நீர் அடித்து சென்று சென்றது.   இதில் 2 பேரும் பலியானார்கள். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். ஜெகன் என்ற சதீஷ்குமாருக்கு புவனா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குமரேசனுக்கு தீபா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளார்கள். இரண்டு பேர் உறவினர்களும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இச்சம்பவம் இப்பகுதியில்  சோகத்தை ஏற் ஏற்படுத்தியுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..