அதிமுகவில் வயதானவர்களுக்கு சீட்டு கிடையாது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தடாலடி..!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மல்லியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பேசியதாவது.!

அ.தி.மு.க வில் வயதானவர்களுக்கு சீட்டு கிடையாது. பிரிந்து போனவர்கள் தற்போது அதிமுக இணைந்துள்ளார்கள். அண்ணன் தம்பிகளுக்கிடையே சண்டை நடந்துள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சியான அதிமுகவில் சண்டை இருக்கத்தான் செய்யும். அதிமுக மட்டுமே ஆள வேண்டும். வசதி வாய்ப்பு இல்லாமல் வயதானவர்களுக்கு சீட் கொடுக்க முடியாது. இது கம்யூட்டர் காலம் அதனால் இளைஞர்களை தேர்வு செய்து சீட்டு கொடுங்கள்.

திமுக அழிந்து வருகிறது. அதில் உள்ளாட்சி தேர்தலில் சீட் கேட்க ஆள் இல்லை. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் சங்கை பிடித்தோம், தப்பி தவறி 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஜெயித்து விட்டார்கள். சங்கை இறுக்கி பிடித்தால் சோலி முடிஞ்சிருக்கும், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தற்போது அதிமுக பக்கம் உள்ளனர். திமுக தப்பு செய்ய ஆட்சிக்கு வரும் அதிமுக நல்லது செய்ய ஆட்சிக்கு வரும்.” என்றார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..