கீழக்கரை இஸ்லாமியா மேல்நிலை பள்ளியில் “Model with Moral” எனும் மாறு வேட போட்டி..

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சின்னஞ்சிறு குழந்தைகள் வித்தியாசமாக வேடமணிந்து வந்து அவர்கள் வேடத்திற்கு ஏற்ப உரை நிகழ்த்தி,  நடித்து காட்டினர்.
ஆள் துளை கிணறு, மரங்களின் பங்களிப்பு, ஆரோக்ய உணவு வாழ்க்கை மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் போன்ற பல்வேறு வேடமணிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்போட்டிகளை ஏராளமான பெற்றோர்கள் கண்டு ரசித்தனர்.  பள்ளியின் தாளாளர் எம் எம் கே முகைதீன் இப்ராகிம் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image