அர்ச்சனை செய்யக்கூறியது தவறா.?ரவுடியாக மாறிய அர்ச்சகர்.!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி கும்பிட சென்ற பெண்ணை கண்ணத்தில் அறைந்த தீட்சிதர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.!

சிதம்பரத்தை சேர்ந்த செல்வகணபதி என்பவரது மனைவி லதா தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயில் பிரகாரத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்ய சென்றார்.

அங்கிருந்த தீட்சதரிடம் தேங்காயை கொடுத்த போது, அர்ச்சனை ஏதும் செய்யாமல் தேங்காயை மட்டும் உடைத்து கொடுத்திருக்கிறார். இதற்கு ஏன் அர்ச்சனை செய்யவில்லை என கேட்ட லதாவை அர்ச்சகர் தகாத வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.

இதனால் தேங்காயை உங்கள் கையால் வாங்கமாட்டேன் எனக் லதா கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தீட்சிதர் லதாவை கண்ணத்தில் அறையவே அவர் சுருண்டு விழுந்தார்.

இந்நிலையில் தீட்சதர் தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..