பாஜக MP கவுதம் கம்பீர் காணவில்லை, போஸ்டரால் டெல்லியில் பரபரப்பு..!

டெல்லி கிழக்குத் தொகுதி பாஜக எம்.பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீரை காணவில்லை என டெல்லியில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் கம்பீரின் புகைப்படத்துடன், அவரை காணவில்லை எனவும், கடைசியாக இந்தூரில் ஜிலேபி சாப்பிடும் போது அவரை பார்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

டெல்லியின் காற்று மாசு குறித்து நடைபெற இருந்த நகர்ப்புற மேம்பாட்டு நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம், எம்.பி கவுதம் கம்பீர் உட்பட சில அரசு அதிகாரிகளும் பங்கேற்காததால் தள்ளிவைக்கப்பட்டது.

அந்த சமயத்தில் இந்தூரில் கம்பீருடன் ஜிலேபி சாப்பிட்டு கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை வி.வி.எஸ்.லக்ஷ்மன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து தான் அவரைக் காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered