இராமநாதபுரத்தில் குழந்தைகள் தின விழா

இராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இராமநாதபுரம்சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் செய்யதா அப்துல்லா தலைமை தாங்கினார். சைல்டு லைன் இயக்குநர் கருப்பசாமி வரவேற்றார். பெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பு
, குழந்தைகளிடம் பெற்றோர் எதிர்பார்ப்பு என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பள்ளி முதல்வர் ராஜமுத்து தொடங்கி வைத்தார். தமிழாசிரியை கருணா நடுவராக பணியாற்றினார். பெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பு குறித்து மாணவர்கள் வெற்றிவேல், நரேஷ்குமார், மாணவிகள் வர்ஷினி, தாரணி, குழந்தைகளிடம் பெற்றோர் எதிர்பார்ப்பு குறித்து பெற்றோர் தரப்பில் ரவியத்துல் பசரியா, பிரமிளா, சோலையம்மாள், சிக்கந்தரம்மா ஷாநாஸ் பேசினர். சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த ராஜ் நன்றி கூறினார். சைல்டு லைன் பணியாளர் கிருஷ்ணவேணி மற்றும் நேஷனல் அகாடமி பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..