இராமேஸ்வரம் நகராட்சி, தங்கச்சிமடம் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ., நூதன போராட்டம்..

இராமேஸ்வரம் நகராட்சி திட்டக்குடி, சல்லிமலை, பாரதிநகர் பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்க ஜல்லி கற்கள் குவித்து பல நாட்களாகியும் இன்னும் பணி துவங்கப்படவில்லை இதனால் அச்சாலையில் செல்லும் மாணவ-மாணவியர் உள்ளிட்ட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை சிறிதும் கண்டுகொள்ளாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சிப் போக்கை கடைபிடித்து வருகிறது. போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ள சாலையை துரிதமாக செப்பனிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சல்லி மலை பகுதியில் இருந்து நகராட்சி அலுவலகம் வரை கை, கால், தலை உள்ளிட்ட உறுப்புகளில் கவசம் அணிந்து நகராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.

தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிகளில் மலேரியா, டெங்கு, கிருமி காய்ச்சல், பரவும் அபாயம்.

தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக தூய்மை பராமரிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தங்கச்சிமடம் தர்கா பேருந்து நிறுத்தம் அருகே கொசுவலை அணிவிந்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..