தங்களின் எண்ணங்களை வேஷங்களாக பிரதிபலித்த பள்ளிக் குழந்தைகள்.குழந்தைகள் தின விழாவில் ருசிகரம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பர்.சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு எதைக்கற்றுத் தருகிறோமோ அப்படியே வளரும்.இதைத்தான் அய்யா அப்துல் கலாமும் கனவு காணுங்கள்.பின்பு அதையே மெய்ப்படுத்துங்கள் எனக் கூறினார்.அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்படடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவின் ஒரு பகுதியாக மாறு வேடப்போட்டி நடைபெற்றது.இதில் குழந்தைகள் தாங்கள் பிற்காலத்தில் எப்படி வர நினைக்கிறோர்களோ அதனையே வேடமாக அணிந்து பங்கேற்கும்படி பள்ளித் தலைமை ஆசிரியர் மதன் பிரபு கூறியுள்ளார்.காந்தி நேரு ஜெயலலிதா என அரசியல் தலைவர்கள் வேடம் மட்டுமல்லாமல் போலிஸ் ஆசிரியர் டாக்டர் என வேடமிட்டு வந்தனர்.சில குழந்தைகள் விவசாயி வேடமிட்டு வந்தது குழந்தைகளுக்கு விவசாய ஆர்வம் உள்ளதை பிரதிபலிப்பதாக அமைந்தது.இந்த மாறுவேடப் போட்டியில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

தங்களது கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்றும் விதமாக மாறுவேடப்போட்டி அமைந்ததாக பள்ளிக்குழந்தைகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.விழா இறுதியில் சென்னையைச் சேர்ந்த இன்ப மைய அறக்கட்டளை நிறுவனர் ரஞ்சிதா குன்னியா பள்ளிக்குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

உசிலை சிந்தனியா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image