உசிலம்பட்டி -வலையபட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா

உசிலம்பட்டி அரிமா சங்கம் சார்பாக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த 126வது பிறந்த நாள் மற்றும் குழந்தைகள் தின விழாவை  வளையப்பட்டி கிராமத்தில் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவர் என் வினு பாலன் செயலாளர் எஸ் வி பத்மநாபன் தலைமை தாங்கினா்.   உதவித் தலைமையாசிரியர் முருகேஸ்வரி பெற்றோர் ஆசிரியர் கழகம் மங்கையர்க்கரசி முன்னிலை வகித்தனா்.

விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.பின்னா்   குழந்தைகளுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்பட்டன. பின் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு இனிப்பும் பரிசுப் பொருட்களும் வழங்கி அரிமா சங்கம் தலைவர்   வினு பாலன் பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஊா்பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

உசிலை சிந்தனியா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image